Update on COVID-19 Food Relief in the Northern and Eastern Provinces of Sri Lanka

4 April 2020

Our sincere gratitude to all the generous donors to CTC’s COVID-19 Food Relief Efforts in the Northern and Eastern Provinces of Sri Lanka.

Our ground partners are currently working on purchasing the food supplies and scheduling the food package distribution in the next few days. We will send you updates as we receive them.

As part of the first phase, families in Vavuniya, Trincomalee, Mullaithivu and Kilinochchi will be served, reaching about 250 to 300 vulnerable families per district.

As we approach the fund-raising target for our first phase and distribution efforts are well underway on the ground, preparations for Phase 2 are also underway to expand this imminent service to the remaining districts including Batticaloa, Amparai, Mannar and Jaffna.

Please continue to support our efforts in the next phase by sharing this campaign with your friends and family.

Once again, thank you for your generous contribution. Stay tuned for further updates!

இலங்கையின் வட-கிழக்கு மாகாணங்களிலுள்ள போற்றினாற்  பாதிக்கப்பட்ட மக்களுக்கு தமிழ்க் கனடியர்களின் கோவிட் -19 உணவு நிவாரணம் – தற்போதுள்ள நிலவரம் – ஏப்ரல் 4, 2020

வடக்கு-கிழக்கு மாகாணங்களில் கனடியத் தமிழர் பேரவையால் மேற்கொள்ளப்படும்  கோவிட்-19 உணவு நிவாரண முன்னெடுப்பிற்காக மனமுவந்து தாராளமாக உதவிகளைச் செய்த அத்தனைபேருக்கும் எமது இதயப்பூர்வமான நன்றி.

மண்ணிலுள்ள எமது துணை அமைப்புகள், உணவுப் பொருட்களைக் கொள்முதல் செய்வதிலும், அவற்றை அடுத்து வரும் சில நாட்களில், விநியோகிப்பதற்கான திட்டமிடல்களிலும் ஈடுபட்டு வருகின்றார்கள். விபரங்கள் கிடைத்ததும் அவற்றை நாம் உங்களுடன் பகிர்ந்து கொள்வோம்.

எமது திட்டத்தின் முதல் அங்கமாக, வவுனியா, திருகோணமலை, முல்லைத்தீவு, கிளிநொச்சி மாவட்ட்ங்களில் , தலா 250 முதல் 300 பாதிக்கப்பட்ட குடும்பங்கள் இவ்வுதவிகளைப் பெறுவர் .

இந்த முதலாவது அங்கத்திற்கான நிதி இலக்கை நாம் ஏறத்தாழ அடைத்துக்கொள்ளும் நிலையிலும், விநியோக முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டுவரும் நிலையிலும், நாம் எமது இரண்டாவது அங்கதத்துக்குக்கான தயாரிப்பு நிலையை எட்டியுள்ளோம். இதன் பிரகாரம், எஞ்சியுள்ள மாவட்டங்களான மடடக்களப்பு, அம்பாறை, மன்னார், யாழ்ப்பாணம் ஆகிய பகுதிகளிலுள்ள பாதிக்கப்பட்ட மக்களுக்கு எமது சேவையை விரிவுபடுத்தவுள்ளோம்.

இந்த அடுத்த கட்ட மனிதாபிமான உணவு நிவாரணத்  திட்டத்துக்கு உங்கள் குடும்ப உறவுகள், நண்பர்களின் உதவிகளைப் பெற்றுக்கொடுத்து தொடர்ந்தும் உங்கள்

உதவிகளை நல்குமாறு பணிவுடன் கேட்டுக்கொள்கிறோம்.

உங்கள் தாராளமனமுள்ள தொடரும் உதவிகளுக்கு மிண்டுமொருதடவை நன்றி கூறிக்கொள்கிறோம். மேலும் தகவல்களைத் தருவதற்கு காத்திருக்கிறோம்.

Subscribe to our newsletter