The Canadian Tamil Congress (CTC) extends its formal congratulations to Mr. Joseph Vijay and Tamilaga Vettri Kazhagam on their victory in the Tamil Nadu Legislative Assembly Election.

The Canadian Tamil Congress (CTC) extends its formal congratulations to Mr. Joseph Vijay and Tamilaga Vettri Kazhagam on their victory in the Tamil Nadu Legislative Assembly Election. We also offer our sincere congratulations to all newly elected Tamil Nadu representatives across the political spectrum who have earned the mandate of the people.

CTC has long maintained a strong and productive relationship with the Government of Tamil Nadu, and we remain steadfast in our commitment to continue this work with the incoming administration.

CTC looks forward to building on our history of cooperation to address issues that matter to the global Tamil community. We are eager to engage with the new leadership to further strengthen the cultural, social, and economic ties between the Tamil diaspora in Canada and Tamil Nadu.

We wish the new government great success in its mission to serve with integrity and progress. CTC
remains a dedicated partner in ensuring the continued growth and well being of Tamils worldwide.

தமிழகச் சட்டமன்றத் தேர்தலில் வெற்றி பெற்றுள்ள திரு. ஜோசப் விஜய் அவர்களுக்கும், தமிழக வெற்றிக் கழகத்திற்கும் கனடியத் தமிழர் பேரவை (CTC) மனமார்ந்த வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறது. அத்துடன், மக்களாணை பெற்றுத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள அனைத்துக் கட்சிகளின் பிரதிநிதிகளுக்கும் எங்களது நல்வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறோம்.

தமிழக அரசாங்கத்துடன் நீண்டகாலமாக ஆக்கபூர்வமான உறவைப் பேணிவரும் கனடியத் தமிழர் பேரவை, புதிய அரசாங்கத்துடனும் இணைந்து பணியாற்றுவதில் உறுதியாக உள்ளது.

புலம்பெயர்ந்து வாழும் கனடியத் தமிழர்களுக்கும் தமிழகத்திற்கும் இடையிலான கலாச்சார, சமூக மற்றும் பொருளாதார உறவுகளை மேலும் வலுப்படுத்துவதற்கும், உலகளாவிய ரீதியில் தமிழர்களுக்கு முக்கியத்துவம் வாய்ந்த விடயங்களில் புதிய தலைமையுடன் இணைந்து செயலாற்றவும் கனடிய தமிழர் பேரவை ஆர்வத்துடன் இருக்கிறது.

தமிழ் நாட்டின் புதிய அரசு நேர்மையுடனும், முன்னேற்றப் பாதையிலும் மக்கள் பணியாற்றி பெரும் வெற்றி பெற வாழ்த்துகிறோம். உலகெங்கும் வாழும் தமிழர்களின் நலனுக்காகவும் வளர்ச்சிக்காகவும் அர்ப்பணிப்புள்ள பங்காளியாக கனடியத் தமிழர் பேரவை என்றும் தொடர்ந்து செயற்படும்.

Subscribe to our newsletter