CTC Blood Donation Drive

Canadian blood services is looking for blood donors as the supply of blood is running low. In 2010 Tamil community was recognized by the Canadian Blood Services, and CTC was awarded the “Honored Partner” Award for the highest number of blood donations in the Central Ontario. If you are able and willing, please go to the nearest blood donor clinic and donate blood. We request you make your blood donation under the group name Tamil Canadians.

Group Name : TAMIL CANADIANS

Partner ID : TAMI009345

Blood donor centres are a place of wellness, and they have taken precautions to ensure the safety of donors. The Canadian Blood Services have implemented a screening process and wellness checks at the entrance of the centres to ensure the safety of those coming inside.

After booking your blood donation appointment and you require a ride to the location, please let us know by calling (416) 240-0078 or 416-700-0101

Sign up for your Blood Donation Today and help save a life.

www.blood.ca/en/wellness

After booking your blood donation appointment and you need a ride to the location, please let us know. Call (416) 240-0078 or 416-700-0101

It is safe to donate blood and you can help save a life – Canadian Blood Services

Safety is our highest priority. Enhanced wellness measures are in effect throughout all of our donor centres.

www.blood.ca

கனடியத் தமிழர் பேரவையின் இரத்த தான முயற்சி 

இரத்த வங்கிகளில் ஏற்பட்டுள்ள இரத்தப் பற்றாக்குறை காரணமாக, கனடிய இரத்த சேவைகள், இரத்த சேகரிப்பு முயற்சி ஒன்றை மேற்கொண்டுள்ளது. 2010 ஆம் ஆண்டு இப்படியான ஒரு முயற்சியில் தமிழ்ச் சமுகம் பங்கேற்று, மத்திய ஒன்ராறியோவிலேயே அதிகூடுதல் இரத்த  பங்களிப்பை வழங்கியிருந்தமைக்காக, கனடிய இரத்த சேவைகள் கனடிய தமிழர் பேரவையைத் தனது ‘கெளரவ சகபாடியாகச்’ (Honoured Partner) ஆகச் சேர்த்துக் கொண்டதன் மூலம், எமது சமூகத்தைக் கெளரவப்படுத்தி இருந்தது

இந்தத் தடவையும், உங்களால் இயலுமாகவும், விருப்போடும் இருப்பின், தயவு செய்து, அயலிலுள்ள இரத்த தான நிலையத்துக்குச் சென்று, இரத்தத்தை வழங்குமாறு கேட்டுக்கொள்கிறோம். அங்கு இரத்த தானம் வழங்கும்போது, ‘தமிழ்க் கனடியர் ‘ (Group Name: Tamil Canadians ) என்ற குழுப் பெயரின் கீழ் தானம் செய்யவும்.

Group Name : TAMIL CANADIANS

Partner ID : TAMI009345

அநேகமான நல்வாழ்வு நிலையங்களில் இரத்த தான நிலையங்கள் அமைந்திருப்பதோடு, வழங்குபவர்களின் பாதுகாப்புக்கான முன்னேற்பாடுகளும்  அங்கு மேற்கொள்ளப்பட்டுள்ளன. தானம் செய்ய வருபவர்களின் பாதுகாப்பை முன்னிட்டு, இரத்ததான சேவைகள், வருபவர்களின் உடல் நிலையை நிலைய வாசலில் வைத்துப்பரிசோதித்தே உள்ளே அனுப்புவார்கள்.

இரத்த தானத்துக்கான நேர ஒதுக்கீட்டைச் செய்ததும், தான நிலையங்களுக்குப் போவதற்கு வாகன வசதி தேவைப்படுபவர்கள், தயவு செய்து, (416) 240-0078 அல்லது (416) 700-0101, என்ற தொலைபேசி இலக்கங்களை அழைக்கவும்.

ஒரு உயிரைக் காப்பாற்றுவதற்காக இன்றே உங்கள் இரத்த தானத்துக்காகப் பதிவுசெய்து கொள்ளுங்கள்!

www.blood.ca/en/wellness

Subscribe to our newsletter